ஐ பி எல்லில் இருந்து விலகிய கொல்கத்தா அணி வீரர்

0
Ajinkya Rahane of the Kolkata Knight Riders during match 19 of the TATA Indian Premier League 2022 (IPL season 15) between the Kolkata Knight Riders and the Delhi Capitals held at the Brabourne Stadium (CCI) in Mumbai on the 10th April 2022 Photo by Ron Gaunt / Sportzpics for IPL

ஐபிஎல் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

குஜராத், ராஜஸ்தான், லக்னோ அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், நான்காவதாக அடுத்து சுற்றும் அணிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

குறிப்பாக, 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது கடைசி போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான அஜிங்கியா ரஹானே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக அவர் விலகுவதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ரஹானே தங்கள் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்திடம் தெரிவிக்கையில்,

‘உங்கள் அனைவருடனும் விளையாட்டிலும், வெளியிலும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன்.

ஒரு கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை பற்றியும், மற்ற அனைத்து விடயங்களை பற்றியும் கற்றுக் கொண்டேன்.

கண்டிப்பாக அடுத்த ஆண்டு வலிமையுடன் திரும்பி வருவேன்.

அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் ஒரு அணியாக நாம் சிறப்பாக செயல்படுவோம்.

பிளேஆப் சுற்றுக்கு கண்டிப்பாக கொல்கத்தா அணி செல்லும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here