ஐ.நாவில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று! முடிவுக்காக காத்திருக்கும் இலங்கை

0

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

30/1 பிரேரணையில் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக மறுசீரமைப்பு பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று 40/1 என்ற சம்பந்தப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் அபிவிருத்தி, நிலக்கண்ணிவெடி அகற்றல் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தல் தொடர்பில் பாராட்டு தெரிவிக்கும் விடயமும் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகள் மத்தியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நாடுகள் 47 இடம்பெற்றுள்ளன. இவற்றில் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here