ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி!

0

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து வருவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை உளவுத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

மூன்றாவது நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை உடனடியாக கண்டறிந்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலையம் மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் தரக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here