ஐ.எஸ். அமைப்பினருடன் 702 இலங்கையர்கள் தொடர்பு!

0

இந்தியாவை மையப்படுத்திய ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய இலங்கையர்கள் 702 பேர் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தியாவின் அரச புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட மொஹமட் சம்சுடீன் என்ற ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவரால் நடத்தப்பட்ட வட்சப் குழுவுடன் குறித்த இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளதாகப் பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த இலங்கையர்கள் 702 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்தப் பிரிவினர் நீதிமன்றின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here