ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார்

0

பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, விக்ரம் பிரபு, திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.

கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுச்சேரியில் ஷூட்டிங்கில் இருக்கும் சரத்குமாரை பார்ப்பதற்காக அவரின் மகள்களான வரலட்சுமியும், பூஜாவும் சென்றுள்ளனர். அங்கு ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராதியாவை சந்தித்துள்ளனர்.

அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here