ஐஸ்வர்யாவை பிரிகிறேன்: தனுஷ் எடுத்த திடீர் விவாகரத்து முடிவு

0

பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் 18 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக வாழ்ந்து வந்தோம் என்றும், எங்களது பயணத்தில் நல்ல வளர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை ஆகியவை இருந்ததாகவும் கூறியுள்ளார்

ஆனால் இன்று ஐஸ்வர்யாவும் நானும் தனித்தனியாக பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது தனிப்பட்ட முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய இந்த பதிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here