ஐரோப்பிய நாடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் விபத்து! 14 கொரோனா நோயாளிகள் மரணம்

0

ஐரோப்பிய நாட்டிலுள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறி கட்டிடம் முழுவதும் பரவிய தீயினால் சுமார் 14 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக வடக்கு மாசிடோனியாவும் திகழ்கிறது. இந்த நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் மருத்துவமனையிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறி மருத்துவமனை கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இந்த தீயில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் சுமார் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இந்த விபத்து குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது, தற்காலிக கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here