ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு முக்கிய தகவல்

0

ஐரோப்பாவை நோக்கி பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு, வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கடவுச்சீட்டு தொடர்பில் புதிதாக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், பயணம் மேற்கொள்வதற்கு முன், தங்கள் கடவுச்சீட்டுகளை சமீபத்தைய விதிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுமாறு அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் முதலான நாடுகளுக்கு செல்லும் பயணிகள், தங்கள் பாஸ்போர்ட்டில் போதுமான பக்கங்கள் உள்ளதா என்பதை பார்த்து, இல்லையென்றால் புதுப்பித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தங்கள் பாஸ்போர்ட் செல்லத்தக்க வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டுகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டவையாக இருத்தால் நன்மையானது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பிரித்தானியர்கள், பயணம் தொடர்பான விவரங்களை GOV.UK என்ற இணையதளத்திலிருந்து அறிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here