ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து! பலர் பலி

0

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கில் சென்ற ஏதிலிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 57 பேர் பலியாகினர்.

லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சி நகரில் இருந்து 75 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது.

அந்தப் படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது.

இதன்போது 2 குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் அடங்கலாக 57 பேர் உயிரிழந்தனர்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் அடைக்கலம் தேடி கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு ஏதிலிகளாக செல்வது அதிகரித்து உள்ளது.

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் புலம் பெயர்கின்றனர்.

இந்த பயணத்தில் பல காரணங்களால் அடிக்கடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here