ஐரோப்பிய நாடுகளுக்குள் படையெடுத்தது ஒமிக்ரோன்

0

தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் பிறழ்வு, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இரண்டு தொற்றாளர்களும், ஜேர்மனியில் இரண்டு தொற்றாளர்களும், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒவ்வொரு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், செக் குடியரஸில் சந்தேகத்திற்குரிய தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒமிக்ரோன் தொற்றாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

தென்ஆபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டவர்களுக்கே, இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதிய பிறழ்வு பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசித்துள்ளதை அடுத்து, கடுமையான சுகாதார நடைமுறை பின்பற்ற மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் வாரம் முதல் பொது போக்குவரத்து, வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் செறிந்துள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவிற்குள் வருகைத் தரும் அனைவருக்கும் PCR பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here