ஐரோப்பிய நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான திட்டம் கலந்துரையாடப்படவுள்ளது.
இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவுள்ளது.
ருமேனியாவுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்கள் குழுவொன்றுக்கு விமான டிக்கட்களை வழங்கும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பணியாளர்களின் நடத்தை மற்றும் திறனைப் பொறுத்து ஒரு வருட ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க ஏற்கனவே வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுளள்ளார்.
ருமேனியா பணிக்காக தற்போது வரையில் சுமார் 800 பேரின் பட்டியல் தூதரகத்திடம் இருப்பதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ருமேனிய வேலைகளுக்காக பதிவு மற்றும் நிர்வாகக் கட்டணம், விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணங்களை மாத்திரமே அறவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ருமேனிய வேலைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெரும் தொகையை அறவிடுவதாக வெளியான தகவல்கள் தவறானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.