உக்ரைன் ரஷ்ய போர் தீவிரமடைந்து வருகின்றது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜனநாயக நாடுகளாக ஒன்றிணையுமாறு ஐரோப்பிய தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
இப்போரானது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் உலகப் பணவீக்க விகிதம், கனடாவில் மூன்று தசாப்த கால உயர்வையடைந்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடர்பிலும் உரிய முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், உக்ரைன் கோதுமையின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், இது உலகளாவிய உணவு விலையை உயர்த்தியுள்ளது என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களையும் போருக்கு தேவையான உதவிகளையும் அனுப்ப வேண்டும்.
ரஷ்யா மற்றும் பெலாரஸில் உள்ள புடின் மற்றும் அவருக்கு உதவுபவர்கள் மீதான பொருளாதார தடைகளை மேலும் இறுக்க வேண்டும் எனவும் ட்ரோடோ கோரிக்கை வைத்தார்.