ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் காலமானார்…

0

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி வயது 65 உடல்நலக்குறைவால் காலமாகியதை அவரது செய்தித் தொடர்பாளர் Roberto Cuillo உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தாலியின் Aviano-வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டேவிட் சலோலி, ஜனவரி 11ம் திகதி அதிகாலை 1.15 மணிக்கு காலமானார்.

இறுதி ஊர்வலம் நடைபெறும் திகதி மற்றும் இடம் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என Roberto Cuillo தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 10 அன்று, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்புடன் தொடர்புடைய கடுமையான பிரச்சனைகள் காரணமாக சசோலி இத்தாலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதைய தலைவர் ஒருவர் மரணம் அடைந்தது இதுவே முதல் முறை ஆகும்.

டேவிட் சசோலி 2019 முதல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here