ஐரோப்பிய ஒன்றியத்தால் கோவிட் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட நாடுகள்

0

கனடா, அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கோவிட் அபாய பகுதியாக அறிவித்துள்ளது.

கனடா, அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு புதிய பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பெறாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்க அனுமதியுள்ள மக்கள் பட்டியலிலிருந்து கனடா, அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஆகவே, Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் காணப்படும் மேற்கூறப்பட்ட நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பெறாதோருக்கான பயணக்கட்டுப்பாடுகள் நேற்று முதல் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கனடா, அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக செல்வதற்கு தொடர்ந்து தடை விதிப்பதை பரிந்துரைப்பதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here