ஐரோப்பா முழுவதும் வியாபிக்கும் நிலை….

0

பிரான்சில் இந்த கோடை காலத்தில் இரண்டாவது முறையாக காட்டுத்தீ பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒட்டுமொத்த தேசமும் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது.

ஆனால் 100க்கும் மேற்பட்ட வறண்டு கிடக்கும் நகராட்சிகளுக்கு, அவற்றின் சப்ளையை ரேஷன் செய்யக்கூட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை.

வரலாறு காணாத நெருக்கடி என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர், பெரும்பாலான சமூகங்கள் தண்ணீரின்றி அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவசரத்திற்காக போத்தல் குடிநீரை மக்கள் எதிர்பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் அவசரகால நடவடிக்கைகளின் கீழ் இருப்பதால், தண்ணீர் பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது.

போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் உள்ள ஒரு ஆற்றில், குறைந்த நீர்மட்டம் மற்றும் நச்சு இரசாயனங்கள் கலந்ததன் காரணமாக ஐந்து டன்கள் இறந்த மீன்கள் தண்ணீரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

இத்தாலியின் போ நதி வரலாற்றில் மிகக் குறைவான நீர் மட்டத்தை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here