ஐரோப்பா செல்லும் வலிமைப் படக்குழு… அஜித் ?

0

ஐரோப்பா செல்லும் வலிமைப் படக்குழுவில் அஜித் செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இங்கு எடுத்த காட்சிகளை வெளிநாட்டில் எடுத்தது போல காட்டுவதற்காக அங்கு சில காட்சிகளை இயக்குனர் சென்று எடுக்க உள்ளார். இதற்காக வலிமைப் படக்குழு ஐரோப்பா செல்ல உள்ளது. ஆனால் அந்த குழுவில் அஜித் செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here