ஐரோப்பாவில் சர்சையில் சிக்கிய இள வயது பெண் பிரதமர்

0

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பங்கேற்ற விருந்து நிகழ்வு தொடர்பான காணொளி இணையத்தளத்தில் கசிந்துள்ள நிலையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

எனினும் தான் போதைப்பொருள் எடுத்து கொள்ளவில்லை என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

36 வயதான சன்னா மரின் 2019-ஆம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளவயது பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.

சன்னாவும் அவரது நண்பர்களும் உற்சாகமாக பாடி, நடனம் ஆடும் காணொளி சமூக வலைதளங்களில் பிரபலமானது. அந்த காணொளியை கண்ட பலரும் சன்னா போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சுமத்தினர். குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியே நாட்டின் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வதா என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பினர்.

இந்தச் சூழலில், அந்த காணொளிக்கு சன்னா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “நான், என் நண்பர்களுடன் இணைந்து விருந்து தான் ஏற்பாடு செய்தேன். நான் எந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. எனது தனிப்பட்ட காணொளி பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை நினைத்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.

என் நண்பர்களுடன் இணைந்து விருந்தில் கலந்து கொண்டேன். நடனம் ஆடினேன், பாட்டு பாடினேன். மது உட்கொண்டேன். ஆனால், நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் செய்தது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

சன்னா மரியா பதவி விலக வேண்டும் என்று குரல் எழுந்து வரும் நிலையில், பிரதமர் என்றால் 24 மணி நேரமும் பணி செய்து கொண்டிருக்க வேண்டுமா என்று பலரும் சன்னா மரினுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here