ஐரோப்பாவில் உச்சக்கட்டத்தை எட்டும் கொரோனா!

0

ஐரோப்பாவில் கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடுகள் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

ஜேர்மனியில், மூன்று மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் கூடுதல் அதிகாரங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். முடக்கநிலையை அறிவிப்பது, பாடசாலைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க, அதிகாரங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

நாட்டின் வாராந்திர கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம், புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜேர்மனியின் மத்திய அரசாங்கமும் 16 மாநிலங்களின் தலைவர்களும், அடுத்த வாரம், புதிய நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகள்பற்றி விவாதிக்கவுள்ளனர்.

இதற்கிடையே, நெதர்லந்தில் பகுதி முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 20 நாள்களுக்குச் சமூகப் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். வீடுகளுக்குக் கூடுதல்பட்சம் நான்கு விருந்தினர்கள் மட்டுமே செல்ல முடியும்.

உணவகங்கள், காப்பிக்கடைகள் முதலியவை திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என அறிவிக்க்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here