கடந்த சில நாட்களாக துருக்கியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது,
இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
16 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் திங்களன்று மூடப்பட்டது.
காற்றுடன் மழைபோல் பனி கொட்டியதால், விமான நிலைய கிடங்கின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் விமான சேவைகள் 10.00 GMT வரை ரத்து செய்யப்படுவதாக விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள், தடுப்பூசி மையங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது