ஐயாயிரம் ரூபாய் கிடைக்காத சமூர்த்தி பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0

இலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு சமூர்த்தி பயனர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நிதியை சமூர்த்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் உறுதி செய்யப்பட்ட ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக்கொள்ளுமாறு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here