2022 ஆம் ஆண்டு ஐபிஎல் 15 ஆவது சீசன் வரும் மார்ச் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
இதற்காக தோனியின் சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் உத்தேச 11 வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஓபனருக்கான இடங்களில் ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே ஆகியோர் விளையாட உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
11 வீரர்கள் பின்வருமாறு
தோனி,
ருதுராஜ் கெய்க்வாட்,
டிவோன் கான்வே,
ராபின் உத்தப்பா,
மொயின் அலி,
அம்பத்தி ராயுடு,
ரவீந்திர ஜடேஜா,
டுவைன் பிராவோ,
ராஜ்வர்தன் ஹர்கர்கேகர்,
முகமது ஆஷிப்,
ஆடம் மில்னே.