ஐபிஎல் தொடரில் பிசிசிஐ வெளியிட்ட அதிரடியான அறிவிப்பு

0

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் தேவ்தத் படிக்கல் சூப்பரான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் திகதி மும்பையில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி லைனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் என்ற போர்டில் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பட்டால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் வீரர் தேவ்தத் படிக்கல் அடித்த சிக்ஸர் அந்த பலகையில் பட்டதால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here