ஐபிஎல் 2022 ஏலம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சுரேஷ் ரெய்னா விற்காமல் போயுள்ளார்.
அவரது அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
ஒருவேளை பின்னால் இந்த விலையை விடவும் குறைவாக அவர் ஏலம் எடுக்கப்படலாம்.
இந்த சுற்றில் ஸ்டீவ் ஸ்மித், ரெய்னா, டெவிட் மில்லர், ஷாகிப் அல் ஹசன் விற்கவில்லை.
ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு எளிதில் தக்கவைத்தது.
யாரும் இவருக்கு போட்டியிடவில்லை, பிராவோவுக்கு டெல்லி அணி கடுமையாக மோதியது.
ஆனால் கடைசியில் விலையை ஏற்றி விட்டு ரூ.4.40 கோடியில் பின் வாங்க சிஎஸ்கே பிராவோவை தக்கவைத்தது.
இதில் பெரிய ஏமாற்றம் சுரேஷ் ரெய்னாதான், 205 ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்களுக்கும் மேல் அடித்தவர் முதல்சுற்றில் விற்காமலே போனார்.
இது அவருக்கு பெரிய ஏமாற்றமாகவே இருக்கும். சென்னை அணியும் அவரை கண்டு கொள்ளாதமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.