ஐந்தாவது நாளாகவும் தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம்!

0

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 5ஆம் நாளாகவும் தொடர்கிறது.

இதன்படி ,தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரிதிநிதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றன.

மேலும் இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் கல்வியை பாதிக்கும் செயற்பாட்டில் ஈடுபடவேண்டாம் என கோரிக்கைகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here