ஏ9 வீதியில் கோர விபத்து! 7 பேர் படுகாயம்

0

கிளிநொச்சி – கொக்காவில், ஏ9 வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (31) மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஏ9, வீதி வழியாக கிளிநொச்சி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர், வாகனம் கொக்காவில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் வாகன சாரதி உட்பட படுகாயமடைந்த ஏழு பேரும் மணலுக்குள் புதையுண்டு இருந்த நிலையில் வீதியால் பயணித்தவர்கள் அவர்களை மீட்டு நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சாரதி வாகனத்தை அதிவேகமாக செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனம் வீதியில் விபத்துக்குள்ளான நிலையில் வீதியில் பயணித்த வவுனியா ஊடகவியலாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன் நோயாளர் காவுவண்டிக்கும் அழைப்பை ஏற்படுத்தி காயமடைந்த ஏழு பேரையும் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here