ஏ.ஆர்.ரஹ்மானின் ”99 சாங்ஸ்” படம் ஓடிடியில் ரிலீஸ்

0

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எழுதி இசை அமைத்து தயாரித்த திரைப்படம் ’99 சாங்ஸ்’ இந்த படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆன நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது

ஆனால் படம் ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக பல திரையரங்குகள் மூடப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர்
’99 சாங்ஸ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.

‘99 சாங்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் எனக் கூறியது போன்றறு தற்போது இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 16 ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பு , திரைக்கதையில் இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ஆனால் கொரோனாவால் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன என்பதும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தியேட்டரில் ரிலீஸாகி 30 நாட்கள் கழித்து இப்படம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here