அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 3டி பிரிண்டர் மூலம் வீட்டில் தயாரித்ததாகக் கூறப்படும் துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பொம்மையை ஒத்திருந்தாலும், கடுமையான தீங்கு விளைவிக்கும் திறன் உள்ளது என்று புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இந்த துப்பாக்கியை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலானது ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
