எலுமிச்சை இருந்தால் போதும் வீட்டிலிருக்கும் கெட்ட சக்திகளை விரட்ட….!!

0

எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலிருக்கும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று பார்க்கப் போகிறோம்.

பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும்.

3 பச்சை எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை எப்போது மஞ்சளாகவோ அல்லது கருப்பாகவோ மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.

மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.

வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 எலுமிச்சையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒரு கண்ணாடி பௌலில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.

வெளியே செல்லும் போது 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு சென்று, வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சையை வெளியே எடுத்துப் பாருங்கள். அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை எலுமிச்சை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here