எலிசபெத் ராணியின் இறுதி கிரியை …வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பெரும் பரபரப்பு!

0

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

ராணியின் சவப்பெட்டியில் இருந்து கொடியை இழுக்க முயற்சித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் சவப்பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி ஒடி வந்து தொட்டதாக தெரியவந்துள்ளது.

அந்த நபர் ரோயல் ஸ்டாண்டர்டை சவப்பெட்டியில் இருந்து இழுக்க முயன்றதாக The Wall Street Journal குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here