எலிகள் உடலில் ஒரு வகை கொரோனா வைரஸ்…!

0

நியூயார்க்கில் எலிகள் உடலில் ஒரு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் எலிகளிடமிருந்து பரவலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

அது விலங்குகளிடம் பரவுவது கவனிக்கப்படாமலே விடப்பட்டு, பின்னர் புதிய ஒரு வகை கொரோனா வைரஸாக மனிதனுக்குப் பரவும் அபாயம் உள்ளது.

ஆய்வாளர்கள் எலிகளின் எச்சத்தை ஆய்வுக்குட்படுத்திய போது அவற்றில் கொரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

சாக்கடையிலிருந்து அந்த எலிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

எலிகள் சாக்கடைத் தண்ணீரைக் குடித்து, மனித மலத்தை உண்ணுவதால் அவற்றிற்கு மனிதர்களிடமிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாக்கடையில் இதுவரை உயிருள்ள கொரோனா வைரஸைக் கண்டறியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here