எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுமா…. ? அறிவியலாளர்கள் விளக்கம்

0

கொரோனா தொற்றானது மக்களிடையே மிக விரைவாக பரவக்கூடியது.

இந்நிலையில் வைரஸானது எளிதில் எலிகளுக்குள் பரவக்கூடியது என பிரித்தானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் அறிவியல் ஆலோசகர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு கொரோனா பரவ இயலக்கூடியது.

குறிப்பாக, கென்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வகை வைரஸ்கள் எளிதில் எலிகளுக்கு பரவக்கூடியவை.

சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமத்துறை ஆய்வாளர்கள் கூறும்போது, எலிகளுக்குள், அதாவது ஒரு எலியிடமிருந்து மற்ற எலிகளுக்கு எளிதில் கொரோனா பரவும் என்று தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில், எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

எலிகள் இருக்கும் இடத்தில் வேலை செய்பவர்கள், குறிப்பாக, கழிவுநீர் கால்வாய்கள் முதலான இடங்களில் வேலை செய்பவர்களுக்கு எலிகளிடமிருந்து கொரோனா பரவ வாய்ப்புள்ளது

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மனிதர்களுக்கும் எலிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பும், அதனால் எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பும் மிகவும் குறைவு.

எலிகள் நடமாடும் இடத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அந்த அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here