எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பால் ஏற்பட்டுள்ள பரபரப்பு….. லிட்ரோ நிறுவனம் தகவல்!

0

இலங்கையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் திடீரென விடித்து சிதறுகின்றமையால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் சில மாற்றங்களை செய்ததாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொலைகாட்சி செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் லிட்ரோ நிறுவனத்தின் முகாமையாளர் ஐ.விஜயரத்ன பல மாதிரிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காணப்பட்ட நிலையான அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளிக்காமையினால் அந்த சிலிண்டர்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது சந்தையில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் கலவையானது நிலையான தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here