எரியும் கட்டிடத்தில் இருந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞர்!

0

ரஷ்யாவின் மாஸ்கோவில் கட்டிடத்தின் 9 வது மாடி தீப்பிடித்து எரிந்துள்ளது.

அதில் சிக்கிக்கொண்ட சிறுமியை இரு இளைஞர்கள் இணைந்து காப்பாற்றிய வீடியோ வெளியாகி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கடந்த 29 ஆம் திகதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

அதில் சிறுமி ஒருவர் 9 வது மாடியில் சிக்கிக்கொண்டதை தொடர்ந்து அவரை மீட்கும் முயற்சியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டு அந்த சிறுமியை வெற்றிகரமாக காப்பாற்றினார்கள்.

Robot vomit என்பவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “முதலில் இதை நான் பார்க்கும் போது எனக்கு கண்கள் கலங்கிவிட்டது.

நமக்கு வரும் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பிறருக்கு செய்யும் உதவிகள் மனிதாபிமானத்தின் சிறப்பு.

அவர்கள் இருவருக்கும் மிகுந்த மரியாதைகள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவருக்கு கையில் தீ காயங்களும், மற்றொருவருக்கு உடைந்த கண்ணாடி துண்டுகளால் சில வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here