எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்கள்….. கிரிக்கெட் பிரபலத்தின் நெகிழ்ச்சியான செயல்

0

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு வோட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தை ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் மக்கள் வரிசையில் காத்துக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு வரிசையில் நிற்பவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை வழங்கியுள்ளார்.

சமூக உணவு பகிர்வு அணியினருடன் இணைந்து எரிபொருள் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு நேற்று மாலை பனிஸ் மற்றும் தேனீர் வழங்கியதாக ரொஷான் மஹாநாம தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here