இலங்கையில் எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும்.
தனியார் பயணிகள் பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கு இன்று முதல் 24 மணிநேரமும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருளை வழங்கும்.
மேலும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.