எரிந்து கொண்டிருந்த சடலத்தின் மீது பாய்ந்த இளைஞர்….! இந்தியாவில் அவலம்

0

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் சாகர் மாவத்தில் உள்ள மஜ்கவான் கிராமத்தில் ஜோதி தாகா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார்.

அவரது உடல் சுடுகாட்டில் வைத்து எரியூட்டப்பட்டது.

ஜோதியின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோது உறவினர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

ஆனால் கரன் (21) என்ற இளைஞர் மட்டும் சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த சிதை முன்பு சென்றுள்ளார்.

ஜோதியின் உறவினரான கரன், சிதை முன்பு விழுந்து வணங்கியதை சிலர் பார்த்துள்ளனர்.

அப்போது திடீரென அவர் எரிந்துகொண்டிருந்த சிதைக்குள் அடியெடுத்து வைத்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர், கரனை வெளியே இழுத்தனர்.

கரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here