அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்பட்ட காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் இதனை கூறியுள்ளனர். மாவிட்டரை, கெஸ்பேவ கம்மனவத்தையில் வசிக்கும் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக அவரை பொல்லுகளாலும் கூரிய பொருளாலும் தாக்கிய சிலரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் முதலில் தனது வீட்டிற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரை வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஒரு குழுவுடன் திரும்பி வந்து அமைச்சரின் சாரதியை பொல்லுகளால் தாக்கி கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் பிலியந்தலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் நேற்று அந்த பகுதியில் தீவிர தேடுதல் நடத்திய போதிலும் சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.