என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பிரபலம் திடீர் மறைவு.

0

அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது. இந்த பாடலில் ‘என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை’ என்ற வரிகளை பாடகி பாக்கியம்மா பாடி இருந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவிற்கு பாடகர் அறிவு, பல இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here