எனிமியில் இருந்து வெளியேறிய ஆர்யா…

0

எனிமி படத்தின் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார் நடிகர் ஆர்யா.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில் இப்போது ஆர்யா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துள்ளது படக்குழு. அதைக் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here