எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பதிலளியுங்கள்! தினேஸ் சந்திமல் கடிதம்

0

இலங்கை அணிவீரர் தினேஸ்சந்திமல் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் அதன் தொழில்நுட்ப குழுவும் பதிலளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தொழில்நுட்ப குழு தலைவர் அரவிந்தடிசில்வாவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் தனது எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்துமாறுவேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக சந்திப்பொன்றிற்கான வாய்;ப்பை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்றுவகை போட்டிகளிலும் தான் பெற்ற ஓட்டங்கள் உட்பட விபரங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சந்திமல் 30 வயதிற்கு முன்னர் பிரபல கிரிக்கெட் வீரர்களின் சராசரியுடன் தனது சராசரியை ஒப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைசிறந்த வீரர்கள் 30 வயதிற்கு பின்னரே மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர் என்பதை அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனது முக்கியத்துவத்தை அவர்கள் ஏன் இந்த தருணத்தில் உணர்கின்றார்கள் இல்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது நான் அணிக்கு தெரிவுபெறுவதற்கு தகுதியானவன் என்பது முற்றிலும் நிருபணமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வீரர் என்ற புள்ளிவிபரங்களிற்கு அப்பால் எனது உடற்தகுதியும்,இலங்கைகிரிக்கெட்டிற்கான ஒழுக்கநெறி தராதரங்களும் மிகவும் உயர்ந்த தராதரத்தை கொண்டவை என தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.

அணிவீரர் என்ற அடிப்படையில் நான் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளேன்,எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அனைத்து முடிவுகளையும் எடுத்தவேளை நான் எனது நாட்டிற்கும் அணிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளேன் – இதன்காரணமாக சில மோசமான விளைவுகளையும் சந்தித்துள்ளேன் என தினேஸ்சந்திமல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக நான் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் எனக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளதுடன் எனது கிரிக்கெட்திறனை பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here