எந்த கோலிவுட் நடிகரும் படைத்திராத சாதனையை படைத்த தனுஷ்

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்க உள்ள முதல் தெலுங்கு படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். இவ்வாறு பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தனுஷை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது நடிகர் தனுஷ் டுவிட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னெவென்றால், நடிகர் தனுஷை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டி உள்ளது. டுவிட்டரில் 1 கோடி பாலோவர்களை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் தனுஷ். நடிகர் தனுஷின் இந்த புதிய சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here