எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய திட்டம்

0

இலங்கை அரசாங்கம் திங்கட்கிழமை (20) முதல் பொதுத் துறைக்கு இரண்டு வார கால வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தையம் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வார கால இணையவழி கற்றல் முறை திட்டத்தையும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சும், அரச நிர்வாக அமைச்சும் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபத்தை வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிகள் ,மருத்துவம், எரிபொருள் விநியோகம், உணவுப்பொருள் விநியோகம் உட்பட்ட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here