எதிர்வரும் ஆண்டில் இரு ஐபிஎல் தொடர்! உற்சாகத்தில் ரசிகர்கள்

0

அடுத்தாண்டு முதல் 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அவர் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு முன்பு யார் கேப்டன்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிவிப்பார்கள்.

மேலும் அடுத்தாண்டு முதல் 2 ஐபிஎல் தொடர்கள் நடத்தப்பட உள்ளன.

ஆண்களுக்கு நடத்தும் அதே நேரத்தில் பெண்களுக்கும் பிசிசிஐ பிரம்மாண்டமாக நடத்த உள்ளது.

இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

அணிகளுக்கான ஏலம் இன்னும் நடைபெறவில்லை.

வீராங்கனைகளுக்கு இது போன்று ஏலம் நடத்தி மகளிர் ஐ.பி.எல். நடத்த உள்ளோம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here