எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைது!

0

கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எம்.வீ. எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் அக்கப்பலின் கெப்டன், பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கப்பலின் கெப்டன், பிரதம பொறியியலாளர், உதவி பொறியியலாளர் உள்ளிட்டோர் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here