எகிப்தில் கோர விபத்து… 17 பேர் பலி…!

0

எகிப்தில் சிற்றுந்து மீது லாரி மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் 17 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் கெய்ரோவுக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொஹாங் மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை பாதுகாப்பில் மிகவும் பின்தங்கியுள்ள எகிப்தில், ஆண்டுதோறும் வாகன விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here