எகிப்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் உள்ள அபு சிம்பல் ஆலய சுற்றுலா தல வளாகத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பயணிகள் பேருந்து, பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேராக மோதியுள்ளது.
ஐந்து எகிப்தியர்கள், நான்கு பிரான்ஸ் நாட்டவர் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ஒருவர் என இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.