ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் செல்ல வேண்டும்…. பிரித்தானிய பிரதமர்

0
LONDON, ENGLAND - APRIL 07: British Prime Minister Boris Johnson welcomes The President Of Poland, Andrzej Duda (not shown) to Downing Street on April 07, 2022 in London, England. (Photo by Aaron Chown - WPA Pool/Getty Images)

பிரித்தானியாவில் குடியிருப்பில் இருந்து பணியாற்ற முடியாது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இதனால், ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் நாளேடு ஒன்றில் நேர்காணல் ஊடாக குறித்த தகவலை போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

குடியிருப்பில் இருந்து பணியாற்றுவதால் உற்பத்தித்திறன் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சக ஊழியர்களுடன் பணியாற்றும் போது உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.

அதிக ஆற்றலுடன் பணியாற்ற முடியும் மேலும் கலந்தாலோசித்து முடிவெடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதையே தனிப்பட்டமுறையில் தாம் விரும்புவதாகவும் பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடியிருப்பில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் தொடர்பாக அரசு ஊழியர்கள் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், பல்லாயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே பணியிடத்திற்கு வர வேண்டும் என்ற நிலை உள்ளது.

மேலும் ஊழியர்கள் முழுமையாக அலுவலகம் திரும்புவதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் கேபினட் செயலாளர் சைமன் கேஸ் எதிர்வரும் வாரங்களில் முக்கிய முடிவெடுப்பார் என்றே கூறப்படுகிறது.

மேலும், பெரும்பாலான ஊழியர்கள் குடியிருப்பில் இருந்தே பணியாற்றி வருவதால் முக்கிய பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here