ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படுமா? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

0

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 6ஆம் திகதி தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் நாம் தீர்மானிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.

இந்தநிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனே முடிவு எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரிவினருடன் இது தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்படும் எனவும், அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here