அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு காணப்பட்ட ஆதரவு மற்றும் செல்வாக்கு தற்போது குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜோ பைடனின் செல்வாக்கு 54% காணப்பட்டதுடன், டிசம்பா் மாதம் கடைசி வாரத்தில் அவரது செல்வாக்கு 41% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜோ பைடனின் ஆட்சியில் சட்டமூலங்களை நிறைவேற்றுதல், அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்கப்படாத காரணத்தினால், அவரின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜோ பைடனுக்கு களங்கம் விளைவிக்கும் மற்றொரு சம்பவம் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்று பங்கேற்றார்.
இதன்போது அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், ஜோ பைடன் அவரை தகாத வார்த்தையில் திட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த ஜோ பைடன் தரப்பினர், பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை தான் அவர் விமர்சித்ததாக தெரிவித்துள்ளனர்.