உலக மக்கள் அனைவருக்கும் உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்

0

உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினின்(Vladimir Putin ) உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போர் தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ளது.

இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில்,ரஷ்யாவால் நடத்தப்படும் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல.

சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து உக்ரைன் அதிபரின் காணொலியை வெளியுறவித் துறை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் காணொலியில் உக்ரைன் நாட்டையும், சுதந்திரத்தையும் ஆதரிக்க அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், வீடுகளிலிருந்து அனைத்து மக்களும் இன்று தெருக்களுக்கு வாருங்கள்.

போரை நிறுத்த வலியுறுத்தும் அனைத்து உலக மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here